Tamil Nadu Government Today's News Bulletin in Tamil (No. 858) on 12.11.2020 - Kalvimalar-கல்விமலர்

Latest

Thursday, November 12, 2020

Tamil Nadu Government Today's News Bulletin in Tamil (No. 858) on 12.11.2020

Tamil Nadu Government Today's News Bulletin in Tamil (No. 858) on 12.11.2020 
tamil news live videos in youtube,tamil news bulletin,breaking news in tamil,tamil news,current news in tamil,tamil news today,news18 tamil,news18 live tamil,tamil news channel,tamil nadu news,tamil news live,top news tamil,top 10 news tamil,flash news in tamilnadu today,latest news in tamilnadu,tamil news live today,tamil news online,top news tamil today,tamil flash news,news18 tamil nadu,live tamil news,online tamil,live news tamil,tamil live news,today headlines news in tamil

தமிழக அரசின் இன்றைய (12.11.2020) செய்திக் குறிப்பு 

செய்தி வெளியீடு எண் 858


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் இன்று 12.11.2020 தலைமைச் செயலகத்தில் தில்லி தமிழ்க் கல்விக் கழகத்தின் சார்பில் தில்லியில் உள்ள மயூர் விஹார் பள்ளி வளாகத்தில் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பெயரில் புதிதாக கட்டப்பட்டுள்ள பள்ளிக்கல்வி கட்டடத்தை காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.

தலைநகர் டெல்லியில் கடந்த கடந்த 90 ஆண்டுகளாக தில்லி தமிழ் கல்வி கழகத்தால் ஏழு இடங்களில் மொழிவாரி சிறுபான்மையினர் மேல்நிலைப்பள்ளிகள் நடத்தப்பட்டு வருகின்றன.  இப்பள்ளிகளில் முதல் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை தமிழ் மொழி கட்டாயப் பாடமாகவும் ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புகளில் விருப்பப் பாடமாகவும் பயிற்றுவிக்கப்படுகிறது.  இப்பள்ளிகளில் பயிலும் சுமார் 7,500 மாணக்கர்களில் 85 சதவீதம் தமிழர்கள் ஆவர். இப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் மூலம் தமிழ் பாட புத்தகங்களை விலையில்லாமல் வழங்கி வருகிறது.

தில்லி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 15 லட்சம் தமிழர்கள் வசிக்கிறார்கள். பெருகிவரும் தமிழ் மக்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு தில்லி வளர்ச்சிக் குழுமத்தால்,  தமிழ் கல்வி கழகத்திற்கு மயூர் விகாரில் புதிய பள்ளி கட்டிடம் கட்டுவதற்கு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மயூர் விஹார் பள்ளி கட்டடம் கட்டுவதற்கு நிதி உதவி வேண்டி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் தில்லி தமிழ் கல்விக்கழகம் கோரிக்கை வைத்தது.  அக்கோரிக்கையை கனிவுடன் ஏற்று,  தமிழ் கல்விக் கழகத்தின் சார்பில் பிகாரில் கட்டப்பட உள்ள பள்ளி கட்டடத்திற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டார்கள்.  அதனை தொடர்ந்து கடந்த 26.10.2018 அன்று மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பெயரில் கட்டப்பட உள்ள பள்ளி கட்டடத்திற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொளி காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார்கள்.

தில்லி தமிழ் கல்விக் கழகத்தின் சார்பில் தில்லியில் உள்ள மயூர் விஹார் பள்ளி வளாகத்தில் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பெயரில் புதிதாக கட்டப்படவுள்ள பள்ளி கட்டிடத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்கள்.  இப்புதிய பள்ளி கட்டடம் 6515 சதுர மீட்டர் பரப்பளவில் தரை மற்றும் நான்கு தளங்களுடன் கட்டப்பட்டுள்ளது. 

இந்நிகழ்ச்சியில் 


மாண்புமிகு பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் கே ஏ செங்கோட்டையன் 

மாண்புமிகு தமிழ் ஆட்சி மொழி தமிழ் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் திரு க பாண்டியராஜன் 

புதுடெல்லிக்கான தமிழ்நாடு அரசின் சிறப்பு பிரதிநிதி திரு என் தளவாய்சுந்தரம்

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக தலைவர் திருமதி பா. வளர்மதி 

தலைமைச் செயலாளர் திரு சண்முகம் இ.ஆ.ப. 

பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் திரு தீரஜ்குமார் இ.ஆ.ப. 

புது தில்லி தமிழ்நாடு இல்லத்தின் முதன்மை  உள்ளுறை ஆணையர் திரு ஹிதேஸ்குமார் எஸ் மக்வானா   இ.ஆ.ப. 

புது தில்லி தமிழ்நாடு இல்லத்தில் உள்ளுறை ஆணையர் திரு ஆஷிஸ் வச்சானி இ.ஆ.ப. 

பள்ளிக்கல்வி ஆணையர் திரு என் வெங்கடேஷ் இ.ஆ.ப. 

பள்ளிக்கல்வித்துறை இயக்குநர்  முனைவர் ச கண்ணப்பன் 

தில்லி தமிழ் கல்விக்கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

வெளியீடு:  இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை 9.

No comments:

Post a Comment