நிலவில் 8 மீட்டர் பயணித்த சந்திரயான்- 3 ரோவர் - Kalvimalar-கல்விமலர்

Latest

Friday, August 25, 2023

நிலவில் 8 மீட்டர் பயணித்த சந்திரயான்- 3 ரோவர்

நிலவில் 8 மீட்டர் பயணித்த சந்திரயான்- 3 ரோவர்

சந்திரயான் 3 லேண்டரில் இருந்து பிரிந்த ரோவர் நிலவில் 8 மீட்டர் தூரத்துக்கு பயணித்துள்ளது என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. நிலவின் மேற்பரப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும் இந்திய விண்வெளி ஆய்வு மையம், ஜூலை 14-ஆம் தேதி எல்விஎம் மாக்-3 ராக்கெட் மூலம் அனுப்பிய சந்திரயான் - 3 விண்கலம் திட்டமிட்டபடி புதன்கிழமை(ஆக. 23) மாலை 6.04 மணியளவில் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இதன்மூலம் ரஷியா, அமெரிக்கா, சீனா நாடுகளுக்கு அடுத்தபடியாக நிலவின் மேற்பரப்பில் கட்டுப்பாட்டுடன் விண்கலத்தை தரையிறக்கி சாதனை படைத்தது. 

மேலும் நிலவின் தென் துருவத்தில் கால் பதித்த முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. சந்திரயான் 3 விண்கலத்தின் லேண்டர் விக்ரம் மற்றும் ரோவர் பிரக்யான் ஆகியவற்றின் செயல்பாடுகளை தொடர்ந்து இஸ்ரோ வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில் சந்திரயான் 3 லேண்டரில் இருந்து பிரிந்த ரோவர் நிலவில் 8 மீட்டர் தூரத்துக்கு பயணித்துள்ளது என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. மேலும் ரோவரில் உள்ள இரு அறிவியல் ஆய்வு கருவிகளான LIBS மற்றும் APXS ஆகிய கருவிகள் செயல்படத் தொடங்கின என்றும் லேண்டர், உந்து விசைக்கலன், ரோவர் ஆகியவையும் திட்டமிட்டபடி சிறப்பாக செயல்படுகிறது என்றும் இஸ்ரோ ட்வீட் செய்துள்ளது.

Chandrayaan-3 rover traveled 8 meters on the moon

The Chandrayaan 3 rover has traveled 8 meters on the moon after separating from the Chandrayaan 3 lander, ISRO said. Chandrayaan-3 spacecraft launched on July 14 by LVM Mach-3 rocket of Indian Space Research Centre, which is conducting research on the surface of the moon, successfully landed on the moon on Wednesday (August 23) at 6.04 pm as planned. This made Russia, USA and China the first countries to land a spacecraft on the surface of the moon under control.

And India has the honor of being the first country to set foot on the South Pole of the Moon. ISRO continues to publish the performance of the Chandrayaan 3 spacecraft's lander Vikram and rover Pragyan. At this stage, the rover separated from the Chandrayaan 3 lander has traveled to a distance of 8 meters on the moon, according to ISRO. ISRO also tweeted that the rover's two science instruments, LIBS and APXS, are operational and the lander, thruster and rover are performing well as planned.

No comments:

Post a Comment