லவங்கம் ஒரு செடியின் எந்தப் பகுதி என்று தெரியுமா? Do you know which part of a plant cinnamon is? - Kalvimalar-கல்விமலர்

Latest

Friday, August 25, 2023

லவங்கம் ஒரு செடியின் எந்தப் பகுதி என்று தெரியுமா? Do you know which part of a plant cinnamon is?

லவங்கம் ஒரு செடியின் எந்தப் பகுதி என்று தெரியுமா?

சுருள் பட்டை என்றால், மரத்தின் தோல் பகுதி, பிரிஞ்சி இலை என்றால் கேட்கவே வேண்டாம்.. இலை, என்பதுபோல லவங்கம் ஒரு செடியின் எந்தப் பகுதி என்று தெரியுமா? நிச்சயம் பலருக்கும் தெரிந்திருக்கும். லவங்கம் என்ற சாக்லேட் நிறத்தில் இருக்கும் வாசனைப் பொருள், ஒரு செடியின் மொட்டுப் பகுதி. மிக அழகான இளஞ்சிவப்பு நிறத்தில் பூ மலர்வதற்குள் மொட்டாக இருக்கும் போதே அவை பறிக்கப்பட்டு, லவங்கமாக மாற்றப்படுகிறது.

இது வெறும் வாசனை நிறைந்தது. பிரியாணிக்கு வாசனையைக் கூட்டும் என்று மட்டும் நினைக்க வேண்டாம். இதில் ஏராளமான மருத்துவக் குணங்கள் உள்ளன. ஏராளமான மருத்துவக் குணங்களைக் கொண்டிருந்தாலும், அதனை பலரும் நாள்தோறும் உணவில் சேர்த்துக்கொள்வதில்லை. ஆனால், அதன் பலன்களைப் பார்த்தால், நிச்சயம் மனம் மாறலாம் என்று கருதப்படுகிறது. அதாவது, லவங்கத்தில் ஏராளமான ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் உள்ளது. விட்டமின் சி சத்தும் நிறைந்துள்ளது. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் காரணமாக, வெளியிலிருந்து உடலைத்தாக்கும் கதிர்களிடமிருந்து உடலுக்கு பாதுகாப்புக் கிடைக்கிறது. உடலுக்குத் தேவையான அழற்சி நீக்கியாகவும் லவங்கம் திகழ்கிறது. தொடர்ந்து லவங்கத்தை உணவில் சேர்த்துக் கொண்டால், உடல் உறுப்புகளில் ஏற்படும் அழற்சி குறையும்.வாய் சுகாதாரத்துக்கு லவங்கம் மிகச்சிறந்தது. 

பல் வலி, ஈறுகளில் வீக்கம் போன்றவற்றுக்கு மருந்தாக இருக்கும். வாய்க்குள் மிக மோசமான பாக்டீரியா தொற்றுகள் ஏற்பட்டால் அதனை நீக்க உதவுகிறது. செரிமாணத்துக்கும் உதவுகிறது. செரிமாணக் கோளாறு, வயிற்று எரிச்சல், வாயுத் தொந்தரவுகளைக் குறைக்கிறது. செரிமாணத்துக்குத் தேவையான நொதிகளை அதிகரிக்கிறது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்கிறது. நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கிறது.

Do you know which part of a plant cinnamon is?

Do you know which part of a plant cinnamon is, like curly bark, the bark of a tree, and brinjal leaf? Surely many people know. Cinnamon is a chocolate-colored aromatic substance, the bud part of a plant. They are picked while still in bud before the beautiful pink flower blooms and is made into cinnamon.

It's just full of fragrance. Don't just think of adding flavor to the biryani. It has many medicinal properties. Although it has many medicinal properties, many people do not include it in their daily diet. But if you see its benefits, it is believed that you can definitely change your mind. That is, cinnamon is rich in antioxidants. It is also rich in vitamin C. Due to its antioxidant content, the body gets protection from the rays that attack the body from outside. Cinnamon is also an anti-inflammatory needed by the body. Consuming cinnamon on a regular basis can reduce inflammation in the body. Cinnamon is excellent for oral hygiene.

It is a remedy for toothache, inflammation of the gums. It helps to eliminate the worst bacterial infections in the mouth. It also helps in digestion. Reduces indigestion, stomach irritation, flatulence. Increases enzymes needed for digestion. Keeps blood sugar levels under control. Increases immunity.

No comments:

Post a Comment