ஜி டி நாயுடு அவர்களின் கண்டுப்பிடிப்புகள் G T Naidu their findings | ஜி டி நாயுடு அவர்களின் வாழ்க்கை வரலாறு Biography of G T Naidu - Kalvimalar-கல்விமலர்

Latest

Sunday, October 4, 2020

ஜி டி நாயுடு அவர்களின் கண்டுப்பிடிப்புகள் G T Naidu their findings | ஜி டி நாயுடு அவர்களின் வாழ்க்கை வரலாறு Biography of G T Naidu

ஜி டி நாயுடு அவர்களின் கண்டுப்பிடிப்புகள் G T Naidu their findings | ஜி டி நாயுடு அவர்களின் வாழ்க்கை வரலாறு Biography of G T Naidu


நாயுடு கண்டுபிடித்தவைகள் ஏராளம்....  ஏராளம்.... 

 தம்முடைய மிகவும் நுட்பமான அறிவுத்திறனால் இந்த அதிசய மனிதர் கண்டுபிடித்தவை உண்மையில் ஏராளமாகும். 

  • தியேட்டர் ஒளிப்பதிவுக் கருவி 
  • ரேடியோ 
  • கடிகாரம் 
  • தொலைநோக்கி 
  • ஓட்டுப் பதிவு செய்யும் கருவி 
  • காபி சப்ளையர்கள் 
  • பணம் போட்டால் உடனே பாடும் கருவி 
  • நுண்ணிய அளவை கருவி
  • கணக்கு போடும் கருவி 
  • பேருந்து அதிர்ச்சியை சோதிக்கும் அற்புதமான கருவி 
  • மின்சார சவரக் கத்தி 
  • பிளேடு 

போன்றவை அவற்றில் குறிப்பிடத்தக்கவை ஆகும். 

தொழிலியல் துறையில் ரூதர் போர்டு போன்றவர்கள் முன் நின்றாலும் தொழிலியல் விஞ்ஞானியாக பெருமைக்குரிய படைப்புகளை தந்தவர் அதிசய மனிதர் என்று அனைவராலும் போற்றப்படும் நாயுடுதான். ஒரு சாதாரண மனிதர் என்று எண்ணப்பட்ட வந்த ஜிடி நாயுடு அவர்களின் கண்டுபிடிப்பில் உருவானதுதான் ரேஷன்ட்  பிளேடு.

ஒரு பிளேடு 200 முறை
முகச்சவரம் செய்யும் விந்தை


மூன்று பிளேடுகளைக் கொண்டும் ஒரு முறை சவரம் செய்ய முடியாத நிலையில் இன்று பிளேடுகள் வந்து கொண்டிருக்கின்றன. இத்தகைய ஒரு அனுபவத்தை பல அன்பர்கள் பெற்றிருப்பார்கள். இவ்விதமிருக்க ஒரு பிளேடு கொண்டு இருநூறுமுறை சவரம் செய்யும் ஆற்றலைக் கொண்ட பிளேடை கண்டு பிடித்தாரென்றால், அவருடைய அறிவாற்றலை என்னவென்று கூறுவது? யார் தான் அவருடைய நுட்பமான செயல்பாட்டை வியக்காமல் இருப்பார்கள்? 

200 முறை நல்ல முறையில் சவரம் செய்ய உதவுவதோடு மட்டும் அல்ல. அது இரண்டு ஆண்டு காலம் வரை அதனுடைய கூர்மை மழுங்காமல் இருந்து வருவதென்ன ஆதாரமான ஒரு விஷயமா? 

இத்தகைய ஒரு தரம் மற்றும் திறம் பற்றி யாராவது எண்ணித்தான் பார்க்க முடியுமா? எத்தனை எத்தனையோ பிளேடுகள் இந்த உலகம் முழுவதும் விற்பனைக்கு வந்துள்ளன. அவை அனைத்தையும் விடவும் மிகச் சிறந்ததாக போற்றப்படுவது ஜிடி நாயுடுவால் கண்டுபிடிக்கப்பட்ட பிளேடுதான் என்று பெருமையுடன் கூறப்படுகிறது.  இதனால் நம் தமிழகத்திற்கு எவ்வளவு சிறப்பு.

பிளேடை கண்டுபிடிக்க வேண்டும் என்ற எண்ணம் 
நாயுடுவுக்கு ஏற்படகாரணம்? 

1932ஆம் ஆண்டில் நாயுடு உலக சுற்றுப்பயணம் செய்த நேரத்தில் லண்டன் நகரத்தில் உள்ள முடி வெட்டும் கடைக்கு சென்று முகசவரம் செய்தார். அதற்கு கூலி ஒருசில ஷில்லாங் அதாவது நமது காசுகளுக்கு 75 காசுகள். அப்போது எந்த ஒரு சில்லிங் என்பது அவருக்கு கூடுதலாக தோன்றியது. அப்போதே நாயுடு ஒரு முடிவுக்கு வந்தார். எப்படியும் நாம் ஒரு பிளேடை கண்டுபிடிக்க வேண்டும் என்ற உறுதியான எண்ணம் அவருக்கு ஏற்பட்டது. 

அதன் பிறகு அவரே பிளேடுகளை கடையிலிருந்து வாங்கிய சேவிங் செய்தபோது கூர்மையற்ற பிளேடுகள் என்பதால் முகத்தில் எரிச்சல் ஏற்பட்டது. எனவே பிளேடை கண்டு பிடிப்பதில் அதிக கவனம் செலுத்தினார். ஆனால் எண்ணம் நிறைவேறவில்லை. 

வேறு எதை எதையோ கண்டு பிடித்த வண்ணம் இருந்தார் ஜெர்மனிக்கு சென்றிருந்தபோது முகச்சவரம் செய்துகொள்ள அவர் கொடுத்த கூறி ஒரு மார்க்கம் அதையும் கூடுதல் என்றுதான் உணர்ந்தார் அங்குள்ள நல்ல பிள்ளைகள் என்று கூறப்பட்ட அவைகளை வாங்கி சேவை செய்து பார்த்தார் முகமெல்லாம் அரிக்க ஆரம்பித்தது. 

எல்லா நாடுகளிலும் இது போன்ற நிலைமைதான் என்று எண்ணி வருந்தினார். எனவே பிளேட் தயாரிக்கும் எண்ணம் மேலும் வளர்ந்து வந்தது. பிளேடையும் தயார் செய்துவிட்டார். தரம் பற்றி அறியும் எண்ணத்தில் பெர்லினில் உள்ள சோதனைச் சாலைகளில் சென்று ஆராய்ந்து பார்த்தார். அவருக்கு திருப்தியாக இருந்தது.

ஹெயின் பிரான் என்றபோது சோபர் ஆப் பெல்டரிஸ் என்ற ஆராய்ச்சி சாலைக்கு சென்று அதன் நிர்வாகியை கண்டு பேசினார்.  தாம் பிளேட் தயாரிக்கும் எண்ணம் கொண்டு இருப்பதாகவும் அதற்கு உதவ வேண்டும் என்றும் கேட்டு அங்கு தான் தன்னுடைய முதல் பிளேடை  தயாரித்து சோதனை நடத்தினார். 

அந்த சோதனைகள் இரவு பகலாக நடைபெற்றன. கடைசியில் ரேசெண்டெட் உருவானது. அதற்கு பாராட்டுக்கள் குவிந்தன. அந்த ஆய்வுக்கூடத்தில் அவர் நடத்திய சோதனைகள் ஒரு நாள் இரண்டு நாள் அல்ல. பல நாட்களாக அவர் சோதனை செய்த வண்ணம் இருந்தார். பின்னர் தான் வெற்றி பெற்றார். ஆம் சில தினங்கள்  பொருத்துதான். அது ஒரு தரமான பிளேடு என்பதை அவரே தெரிந்துகொண்டார். உயர்ந்த ஒரு தரமான பிள்ளையை கண்டுபிடித்து அதற்குரிய "ரேசெண்ட் பிளேடு"  என்ற பெயரும் இட்டார். அது சிறந்த ஒரு தொழிற்சாலை என்பதால் அங்கு வந்து போகும் அறிஞர்கள் நாயுடுவின் கண்டுபிடிப்புகள் உருவான "ரேசெண்ட் பிளேடை"  வெகுவாக பாராட்டினார்கள்.

அதிர்ச்சிய அறிவிக்கும் கருவி 

பொதுவாக மோட்டார் ஓடிக் கொண்டிருக்கும் போது அதிகப்படியான துடிதுடிப்பு ஏற்படுவது இயற்கையாகும். இந்த துடிப்பு அதிகமானதா? அல்லது குறைவானதா? என்பதை அறிவதற்காக இந்த கருவி பொருத்தப்படுகிறது. இந்த கருவியை மோட்டாரில் பொருத்திவிட்டால் அதிர்ச்சியின் அளவு பற்றி மிகவும் துல்லியமாக அறிந்து கொள்ளலாம். 

மோட்டார் வண்டியில் பொருத்தப்படும் ரெப்ரிஜிரேட்டர்

மோட்டார் வண்டியில் ரேடியேட்டர் இருப்பதை நாம் அனைவரும் அறிவோம். இதற்கு பொருத்தமாக இருக்கும்படி செய்வதே இந்த ரெப்ரிஜிரேட்டர் உடைய வேலை ஆகும்.  இது பொருத்தப்பட்டு நீண்டதூரம் ஓடினாலும் ரேடியேட்டரில் அடிக்கடி தண்ணீர் ஊற்ற வேண்டிய நிலைமை ஏற்படாது. அதற்கு வேண்டிய குளிர்ச்சியை இந்த ரெப்ரிஜிரேட்டர்  கொடுத்துக்கொண்டிருக்கும். 

கேமராவில் பொருத்தப்படும் விசேஷ லென்ஸ் 

நாயுடு அவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட லென்சை கேமராவில் பொருத்தினால் மிகவும் தொலைவில் இருக்கும் காட்சியையும் பக்கத்தில் இருப்பது போல காட்டும் ஆற்றல் பெற்றது இந்த லென்ஸ். இந்த புதுமையான லென்ஸ் மூலம் தொலைவில் உள்ள காட்சியை மிகவும் அருகில் இருப்பது போல காட்டி திரையில் கொண்டு வந்து நிறுத்தி படமெடுக்க முடியும். 

ஓட்டு போடும் கருவி

பிரபல விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன் முயற்சி செய்து கண்டுபிடிக்காமல் கைவிடப்பட்ட கருவியாகும். அவரை கண்டுபிடிக்காமல் செய்தவர்கள் அமெரிக்காவில் உள்ள அன்றைய செனட்சபை உறுப்பினர்கள் தான். அதன் பின்னர் அந்த முயற்சி கைவிடப்பட்டது. அமெரிக்காவிற்கு மூன்று முறை பயணம் செய்த நாயுடு இந்த கைவிடப்பட்ட இந்த இயந்திர வாக்குப்பதிவு பற்றி கேள்விப்பட்டார். பின்னர் இந்தியா திரும்பியதும் இந்த கருவியை கண்டு பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வெற்றி பெற்றார். வாக்குப்பதிவு இயந்திரத்தை கண்டுபிடித்ததும் சென்னையில் பூங்கா நகரில் நடைபெற்ற பொருட்காட்சியில் வைக்கப்பட்டு அந்த இயந்திரத்தை இயக்கிக் காட்டினார். 

அதை கண்டு அறிஞர்கள் வியந்தனர். பொதுமக்கள் பாராட்டினர். நாயுடு கண்டுபிடித்த வாக்குப்பதிவு இயந்திரத்தை அன்றைய இந்திய அரசு விரும்பி வரவேற்கவில்லை. நாயுடுவின் கண்டுபிடிப்புகளுக்கு ஊக்கம் அளிக்க வில்லை. அதன் பின்னர்தான் இந்த கருவியை அரசாங்கம் பயன்படுத்த முன் வந்தது. 

இன்னும் எண்ணற்ற கருவிகள் 

சேவைகளை தயாரிப்பதற்கான இயந்திரம் பலவற்றிலும் இருந்து 

  • சாறு பிழியும் கருவி, 
  • இரும்பு சட்டங்கள் ஏற்படும் நுண்ணிய வெடிப்புகளை கண்டுபிடிக்கும் கருவி, 
  • வானொலி 
  • கடிகாரம், 
  • பேருந்து நிலையத்திற்கு வருகின்ற மற்றும் புறப்படுகின்ற காலத்தை காட்டும் கருவி, 
  • துணிகளை சலவை செய்யும் கருவி, 
  • மாவு அரைக்கும் கிரைண்டர் போன்ற அன்றாட வாழ்க்கைக்கு தேவையான கருவிகளை கண்டுபிடித்து உள்ளார். 

இவ்விதம் எல்லாம் அவர் பல கருவிகளை கண்டுபிடித்தாலும் ஜிடி நாயுடு வாழ்ந்த காலத்தில் அரசாங்கம் போதிய ஊக்கம் கொடுக்காததால் நாயுடு வாழ்ந்த காலத்திலேயே அவை பயன்படுத்தாமல் போகவே அவருக்கு ஊக்கம் குன்றியது என்பது உண்மைதான். இருந்தாலும் மனதை தளரவிடாமல் பல அரிய முயற்சிகளில் அதன் பின்னரும் ஈடுபட்டார்.
ஜி டி நாயுடு அவர்களின் கண்டுப்பிடிப்புகள் G T Naidu their findings | ஜி டி நாயுடு அவர்களின் வாழ்க்கை வரலாறு Biography of G T Naidu


No comments:

Post a Comment