துரைசாமி மேற்கொண்ட பலவித முயற்சிகள் Various attempts made by Dhuraisamy | ஜி டி நாயுடு அவர்களின் வாழ்க்கை வரலாறு Biography of G T Naidu
துரைசாமி மேற்கொண்ட பலவித முயற்சிகள்
சிங்காநல்லூர் பருத்தி ஆடையில் அவர் பெற்ற அனுபவத்தைக் கொண்டு தாமும் ஏன் பருத்தி ஆலை ஒன்றை நடத்த கூடாது என்ற எண்ணத்தில் திருப்பூரில் ஒரு ஆலை அமைத்திட முன்வந்தார். இவ்விதம் முன் வந்த அவரிடம் போதிய பணம் இல்லை. இடமும் கிடைக்கவில்லை. கடைசியாக நண்பர்களின் உதவியுடன் பணம் கிடைத்தது. இடம்தான் கிடைக்கவில்லை. கிறிஸ்தவ பாதிரியார் சொந்தமான இடம் ஒன்று விற்பனைக்கு வந்தது. சாதாரணமாக கிறிஸ்தவ பாதிரிமார்கள் உடைய இடத்தை யாரும் வாங்கமாட்டார்கள்.
இவ்விதம் வாங்கி அதில் கட்டிடம் கட்டினால் அது சிறப்பாக அமையாது என்று எண்ணி வந்தார்கள். இவ்விதம் எண்ணுவது மூடத்தனமாக எண்ணியவராய் துணிந்து வாங்கினார் துரைசாமி. நகராண்மைக் கழகத்தின் அனுமதியை பெறவில்லை. பெற்ற பின்னர்தான் கட்டிடத்தை கட்ட வேண்டும் என்பது விதியாகும். பின்னர் எப்படியோ அனுமதி வாங்கி விட்டார். ஆலை இயங்கத் தொடங்கியது.
அப்போது முதல் உலக மகாயுத்தம் ஆரம்பம். ஆனதால் பருத்தித் துணிகளுக்கு நல்ல விலை கிடைத்தது.
ஆலைத் தொடங்கப்பட்ட அந்த ஆண்டில் (1919) மட்டும் அவருக்கு ஒன்றரை லட்ச ரூபாய் லாபம் கிடைத்தது. இவ்வித லாபம் வர, செல்வாக்கும் வளர ஆரம்பித்தது.
தொழிலதிபர் என்ற சிறப்பு
பஞ்சாலைத் தொழில் மூலம் வருமானம் வந்ததும் அவரும் ஒரு முக்கிய புள்ளி ஆகிவிட்டார். காங்கிரஸ் இயக்கத்தில் தீவிர பற்று கொண்டவர். ஆனார் மேலும் பணம் சம்பாதிப்பது, இன்னும் பெரிய ஆளாக வேண்டும் என்று எண்ணியவராய் கோவையில் சம்பாதித்த பணத்துடன் பம்பாய் சென்றார். பஞ்சு வியாபாரம் நடத்த எண்ணினார். கடை வாடகை, இதர செலவுகள் என்று கையில் உள்ள பணம் அனைத்தும் கரைந்தது. எனவே பஞ்சு வாணிகத்தில் அவர் நஷ்டம் அடைந்தார்.
அவர் நஷ்டம் அடையக் காரணம்?
வியாபார ரீதியில் அவரால் செயல்பட்டு முன்னேற முடியாது. கோடி கோடியாக பணத்தை செலவிட்டு ஆலையும் அமைத்து செயல்பட்டாலும் வியாபாரம் நடந்தாலும் முன்னேற முடியாது. காரணம் என்ன தெரியுமா? அவருடையது மெக்கானிக் மூளை.
நுட்பமான முறையில் ஆணியோ, இயந்திரமோ செய்ய வேண்டுமானால் அவருக்கு ஈடுபாடு அதிகம் இருக்கும். இவருடைய நுட்பமான உணர்வு இயந்திரத்திலும், கருவிகளை கண்டுபிடிப்பதிலும் தான் இருக்கும். அவர் கோடி கோடியாக குவித்து வைத்தாலும் அவற்றை விற்று லாபம் சம்பாதிக்க முடியாது. அவருடைய மெக்கானிக் மூளை மூலம் கருவிகளை கண்டுபிடிக்கலாம். இயந்திரங்களை ஓட்ட செய்யலாம். துருப்பிடித்த இயந்திரம் கூட அவர் கை பட்டால் ஓடும்.
அதன் மூலம்தான் அவர் பொருள் சம்பாதிக்க முடியும். துரைசாமி மெக்கானிக்கல் மட்டுமன்றி அனைத்து துறைகளிலும் முன்னேற காரணம் அவரிடம் இயற்கையாக உள்ள ஆற்றல்தான்.
பஞ்சாலை தொழிலில் தோல்வி அடைய காரணம் இதுதான். பின்னர் எவ்விதம் முன்னேறினார் என்றால் மெக்கானிக்கலோடு சம்பந்தப்பட்ட கார் தொழிலில் ஈடுபட்டதால்தான். மின்னாற்றல் சம்பந்தப்பட்ட தொழிலில் ஈடுபட்டு அதனால் தான் மின்சார மோட்டார்களை கண்டுபிடித்து பெரும் புகழ் பெற்றார். பிளேடு கண்டுபிடித்து புகழ் பெற்று சிறந்தார்.
அவர் கண்டுபிடித்து பெரும்புகழ் கொண்டதெல்லாம் மெக்கானிக் மற்றும் மின்னாற்றல் சம்பந்தப் பட்டவை தான் என்பதை இந்த உலகம் அறியும். படிக்காதவராக இருந்தாலும் இவருடைய இயற்கை ஆற்றல் மின் ஆற்றல் மற்றும் மெக்கானிக் சம்பந்தப்பட்ட ஆற்றலினால் இவர் பெரும் புகழ் பெற்றார்.
துரைசாமி மேற்கொண்ட பலவித முயற்சிகள் Various attempts made by Dhuraisamy | ஜி டி நாயுடு அவர்களின் வாழ்க்கை வரலாறு Biography of G T Naidu
No comments:
Post a Comment