ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளை வைத்திருப்பவர்கள் கவனிக்க Note for those holding more than one bank account - Kalvimalar-கல்விமலர்

Latest

Saturday, September 24, 2022

ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளை வைத்திருப்பவர்கள் கவனிக்க Note for those holding more than one bank account

ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளை வைத்திருப்பவர்கள் கவனிக்க.. சேமிப்புக் கணக்கு, நடப்புக் கணக்கு என ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளை வைத்திருப்பது பல நேரங்களில் உதவிகரமாக இருக்கும். ஆனால், ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளை வைத்திருக்கும் போது வாடிக்கையாளர்கள் சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகிறது.  

சொந்த ஊரில் இருக்கும் வங்கியில் முதலில் தொடங்கிய வங்கிக் கணக்கு, பிறகு மாத ஊதியம் வருவதற்கு பணியாற்றும் நிறுவனம் சொல்லும் வங்கியில் ஒரு சேமிப்புக் கணக்கு என பல்வேறு காரணங்களால் ஒவ்வொருவரும் ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளைத் தொடங்கும் நிலை உருவாகிறது. எப்படிப் பார்த்தாலும் ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளை வைத்திருப்பது உச்சிதம்தான். ஆனால் இந்த விஷயங்களை மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள். வங்கி சேவைக் கட்டணம் வங்கிகள், தங்களது வாடிக்கையாளர்களுக்கு பல சேவைகளை வழங்குகின்றன. அதில் சில சேவைகள் இலவசமாகவும், சில சேவைகளுக்குக் கட்டணமும் வசூலிக்கப்படும். 

எனவே, பிடித்தம் செய்யும் சேவைக் கட்டணத்தை கணக்கில் கொள்ளுங்கள். ஒரு வேளை நீங்கள் பயன்படுத்தவே பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் இருக்கும் ஒரு சிறிய தொகை கூட, இந்த சேவைக் கட்டணத்துக்காக பிடித்தம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கலாம். குறைந்தபட்ச இருப்புத் தொகை பல வங்கிகள் குறைந்தபட்ச இருப்புத் தொகையை கட்டாயமாக்கியுள்ளன. அதிலும் சில வங்கிகள் பெரும் தொகையை குறைந்தபட்ச இருப்புத் தொகையாக வைக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றன. அவ்வாறு இல்லாவிட்டால் அதற்கு அபராதம் விதிக்கப்படும். ஒரு வங்கிக் கணக்கில் என்றால் பரவாயில்லை. ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளில் இவ்வாறு குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிப்பது சற்று சவாலாக இருக்கும். 

 எனவே, தேவையற்ற வங்கிக் கணக்குகள் இருப்பின் அவற்றை மூடிவிட்டு, குறைந்தபட்ச இருப்புத் தொகை குறைவாக இருக்கும் வங்கிகளில் புதிய கணக்குகளைத் தொடங்கிக் கொள்ளலாம். பணம் எடுக்கும் அளவு ஒரு பண அட்டையில் ஒரு நாளைக்கு இவ்வளவு தொகைதான் எடுக்க முடியும் என்று நிர்ணயம் செய்யப்பட்டிருக்கும். எனவே, அதைவிட அதிக பணம் தேவைப்படும்போது ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கி அட்டைகள் வைத்திருப்பது பயனுள்ளதாக இருக்கும். 

 வங்கிக் கணக்குகளுக்கு எல்லையுண்டா? ஒருவர் எத்தனை வங்கிக் கணக்குகளை வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். அதற்கு எந்த வரைமுறையும் இல்லை. ஆனால், ஒரு வங்கிக் கணக்கை குறிப்பிட்ட காலத்துக்கு பயன்படுத்தாவிட்டால் அதனை செயலற்ற வங்கிக் கணக்காக வங்கிகள் அறிவித்துவிடுவதும் உண்டு.

People who have more than one bank account to note..Many times it is helpful for a person to have more than one bank account like savings account, current account. However, there are a few things that customers need to keep in mind while having more than one bank account.

For various reasons, everyone starts more than one bank account, starting with a bank account in the hometown bank, then a savings account in the company bank for monthly salary. In any case, having more than one bank account is ideal. But just keep these things in mind. Bank Service Charges Banks provide many services to their customers. Some services are free and some services are charged.

So, take into account the service charge that will be deducted. Maybe even a small amount in your unused bank account is being deducted for this service charge. Minimum Balance Many banks have mandated a minimum balance. Moreover, some banks insist on keeping a large amount as minimum balance. Failure to do so will result in a fine. It doesn't matter if it's in a bank account. Maintaining such minimum balance in more than one bank account can be a bit challenging.

 Therefore, if you have unnecessary bank accounts, you can close them and open new accounts in banks with lower minimum balance. Withdrawal limit A cash card has a fixed amount that can be withdrawn per day. Therefore, it is useful to have more than one bank card when you need more than that amount of money.

 Are there limits on bank accounts? One can have any number of bank accounts. There is no limit to it. However, if a bank account is not used for a certain period of time, banks may declare it as an inactive bank account.

No comments:

Post a Comment