சில தோல் நோய்களும் அதற்கான காரணங்களும் | தோல் நோய் உண்டாகக் காரணம் தெரியுமா? - Kalvimalar-கல்விமலர்

Latest

Wednesday, October 14, 2020

சில தோல் நோய்களும் அதற்கான காரணங்களும் | தோல் நோய் உண்டாகக் காரணம் தெரியுமா?

நமது உடலின் மேலுள்ள தோலின்(சருமம்) முக்கியப் பணிகள்


சில தோல் நோய்களும் காரணங்களும் 

மனித உடலில் அமைந்திருக்கும் எல்லா வகையான உறுப்புகளுமே ஏதாவது ஒரு வகையில் நோய்க்கு இலக்காவது மாற்ற முடியாத ஒரு நியதி. இதே போன்று நமது உடல் சருமம் பல்வேறு வகையான பிணிகளுக்கு இலக்காகவே செய்கின்றது. ஆனால் நமது சருமத்தில் ஒரே மாதிரியான நோய் தோன்றுவது இல்லை. பல்வேறு வகையான பிணிகள் சருமத்தைப் பாதிக்கின்றன. 

நோய்கள் பல தோன்றுவது போல நோய்கள் ஏற்படுவதற்கான காரணங்களும் பலவாறாக உள்ளன. சருமத்தில் ஏற்படக்கூடிய சில நோய்களுக்கு வம்ச பரம்பரை ஒரு காரணமாக அமைகிறது. அதாவது நமது முன்னோர்கள் யாருக்காவது கடுமையான சரும நோய் ஏற்பட்டிருந்தால் அதே நோய் நமக்கும் ஏற்பட வழியுண்டு. இவ்வாறு வம்ச பரம்பரை வழி வரும் சரும நோயை முழுமையாக முற்றிலுமாக குணமாக்கி விட முடியும் என்று கூற இயலாது. சரியான மருந்துகளைப் பயன்படுத்துவதன் நோய் அதிகமாக பரவாமல் கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.

பரம்பரை வழி ஏற்படக்கூடிய சரும நோய்க்கான அடிப்படை குழந்தைப் பருவத்திலேயே அமைந்திருக்கும். நோய் வெளிப்படுவதற்கான வாய்ப்பு ஏற்படுகிற போது அந்த நோய் வெளிப்படையாக வெளியே தெரியும். ஒருவருக்கு ஏதாவது சரும நோய் ஏற்பட்டிருந்தால் அது பரம்பரை வழியாக ஏற்பட்ட நோயோ அல்ல என்பது சரியாகத் தெரிந்து கொண்ட பிறகு தான் சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். 

அது பரம்பரை வழி சரும நோயாக இருந்தால் சாதாரண மருந்துகளை பயன்படுத்தி அதை குணப்படுத்திவிட முடியாது. அது மட்டுமின்றி முற்றிலுமாக குணப்படுத்த முடியாது. பொதுவாக திடீரென்று ஏற்படும் சரும பாதிப்புகளுக்கு நேரடியான மறைமுகமான காரணங்கள் அமைவது உண்டு. ஒருவருக்கு சரியான சத்துணவு பெறப்படாத காரணத்தால் சரும நோய் ஏற்பட வாய்ப்பு உண்டு. அத்தகையோர் சரும நோய்க்கு மருத்துவ சிகிச்சை செய்வதைவிட சரியான சத்துணவை திட்டமிட்டு உட்கொண்டால் நோய் குணமாகிவிடும்.

எதிர்பாராமல் ஏற்படும் சில விபத்துகளும் சரும நோய்க்கு வழிவகுத்துவிடும். தீ விபத்து சாலை விபத்து போன்றவை காரணமாகவும் சருமம் பாதிப்பு ஏற்படலாம். கடுமையான வெயில், மோசமான குளிர், நோய்க் கிருமிகளின் தாக்குதல், ஒட்டுண்ணிகள், அலர்ஜி எனப்படும் ஒவ்வாமை விஷ பூச்சி கடித்தல் போன்றவையும் சரும நோய்களுக்கு காரணமாக அமைவது உண்டு.

ஒரு ஆறுதல் என்னவென்றால் சரும நோய்கள் பெரும்பாலும் உயிராபத்தை விளைவிக்கக் கூடிய அளவுக்கு கடுமையாக இருப்பதில்லை. இந்த நோய்களுக்கு எளிய சிகிச்சைகள் கையாளுவதன் மூலம் எளிதாக கட்டுப்படுத்திவிட முடியும். மிகவும் மோசமான சரும நோய் ஆகிய தொழுநோயை கூட முறையான சிகிச்சை மூலம் கட்டுப்படுத்திவிட முடியும் என்ற நம்பிக்கை தற்கால மருத்துவர்கள் இடம் இருக்கிறது.


சில சரும நோய்களை சிகிச்சை மூலம் குணப்படுத்தி விடுவதாக இல்லை. குறிப்பாக தலை வழுக்கை என்பதும் ஒரு சரும நோய்தான். எந்த மருந்தைப் பயன்படுத்தியும் தலை வழுக்கையை குணப்படுத்திவிட முடியாது. இது போல மிகவும் பயங்கரமான சரும நோயாக மக்களை மிரட்டி கொண்டிருக்கும் புற்றுநோய்க்கும் இன்றுவரை நம்பகமான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. 

ஒரு வேளை மருந்து கண்டுபிடிக்கப்பட்டால் ஒருவேளை எதிர்காலத்தில் புற்று நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கப்படும். சருமநோய் வராமல் தடுப்பதற்கு எளிய பழக்க வழக்கங்களை கடைப்பிடிப்பது போதுமானதாகும். அன்றாடம் தவறாமல் நீராடவேண்டும். நீராடும் போது ஏனோ தானோ என்று அவசர அவசரமாக அதை செய்யாமல் நிதானமாகவும் பொறுமையுடனும் உடல் சருமத்தை நன்றாக தேய்த்து குளிக்க வேண்டும். முன்பெல்லாம் குளிப்பதற்கு சீயக்காய் தூள் குளியல் பொடி போன்றவற்றை மக்கள் உபயோகித்து வந்தார்கள். தற்காலத்தில் பெரும்பான்மையான மக்கள் சோப்புகளை உபயோகிக்கும் பழக்கத்தை மேற்கொண்டிருக்கிறார்கள்.

உடலைத் தேய்த்துக் குளிப்பதற்கு சோப்புகள் உபயோகிப்பது நல்லதா கெடுதலா என்ற வாதப் பிரதிவாதங்கள் இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. பொதுவாக யோசித்தால் சோப்புகள் பல ரசாயனப் பொருட்கள் கலப்படமாக இருப்பதால் உடல் சருமத்துக்கு ஓரளவுக்கேனும் தீங்கு ஏற்படத்தான் செய்யும் என்றாலும், சோப்புகளை உபயோகிக்க வேண்டாம் என்று சொன்னால் இன்று யார் கேட்கப் போகிறார்கள் என்றாலும் அதிக தீங்கு விளைவிக்காத காரச் சத்து குறைவாக உள்ள நல்ல சோப்புகளை தேர்ந்து எடுத்து உபயோகிக்கலாம்.

 தற்காலத்தில் பெண்கள் தலை குளிப்பதற்கு ஷாம்புவை பயன் படுத்துகிறார்கள் தலையில் உள்ள அழுக்கை போக்கும் நோக்கத்துடன்தான் சாம்பு பயன்படுத்தப்படுகிறது என்றாலும் தலையில் சில சரும நோய் ஏற்படுவதற்கு ஒரு காரணம் என்று கருதப்படுகிறது. ஷாம்பு வகைகள் சிலருக்கு ஒத்துக் கொள்வதில்லை. ஆகவே ஷாம்பு பயன்படுத்துவோர் மக்களுக்கு அறிமுகமான நல்ல நிறுவனங்கள் தயாரித்த தரமான சாம்பலாக தேர்ந்தெடு பயன்படுத்துவது நல்லது. 

ஏதாவது சரும நோய் ஏற்பட்டிருந்தால் நம் மக்களில் பலர்  கண்ட கண்ட எண்ணெய் கறையோ முகப்பவுடரையோ எழுதுவதற்குப் பயன்படும் இங்க் வகைகளையோ அவசர சிகிச்சையாகப் பயன்படுத்துவது உண்டு. சிலர் உடலில் ஏதாவது ஏற்பட்டால் சாணம் கழுவி தோல் போன்றவற்றை பூசி விடுவதும் உண்டு. இம்மாதிரியான அறிவுக்கு ஒவ்வாத சிகிச்சை காரணமாக மோசமான நோய் கிருமிகளின் பாதிப்பு ஏற்பட்டு சருமநோய்கள் தீவிரமாக விடுவது உண்டு. இம்மாதிரி காரணங்களால் சில சமயம் நோயை குணப்படுத்த இயலாமல் போய்விடும்.

சரும நோய்களால் பாதிக்கப் பட்டவருக்கு குறிப்பிடத்தக்க உணவு கட்டுப்பாடு எதுவும் தேவை இல்லை. என்றாலும் நாம் உண்ணும் உணவு பொருள் ஏதாவது சரும நோய்க்கு ஒத்துவரவில்லை என்றால் அவற்றை முற்றிலுமாக விலக்கி விடுவது நல்லது. அல்லது சிகிச்சை முடியும் மட்டுமாவது அந்தப் பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்வதை தவிர்ப்பது நல்லது. நோயாளிகளை தனியாக ஒதுக்கி வைத்து சிகிச்சை செய்தாக வேண்டும் என்ற அவசியமில்லை. 

தொழுநோய் போன்ற மிக மோசமான சரும நோய்களுக்கு வேண்டுமானால் அந்த விஷயத்தில் சற்று விலக்கு அளிக்கலாம். ஆனால் தொழு நோயாளிகளை கூட மற்றும் இருந்து பிரித்து வைத்து சிகிச்சை செய்ய வேண்டிய அவசியம் இல்லை என தற்கால மருத்துவ மேதைகள் கருத்து தெரிவிக்கிறார்கள். 

ஏனெனில் தொழுநோய் வகைகளில் ஒன்று என்று மட்டுமே தொற்றுநோயாக உள்ளன. பெரும்பாலான தொற்றுநோய்கள் பிறரை தொற்றக் கூடியவை அல்ல என தற்காலத்தில் தெளிவாகப் புரிகிறது. இப்போது சில வகை சரும நோய் பற்றி விளங்கிக் கொள்ள முயற்சிப்போம். பரம்பரை வழியாக சில நோய்கள் தோன்றக் கூடும் என்று முன்னரே கூறியிருக்கிறோம். ஒருசில மரபுவழி சரும நோயை பற்றி நாம் அடையாளம் கண்டுகொண்டால் மற்ற நோய்களுக்கும் இதற்கு உள்ள வேறுபாட்டை புரிந்து கொண்டு அவற்றுக்கு ஏற்ப சிகிச்சையை மேற்கொள்ள உதவியாக இருக்கும்.

சில தோல் நோய்களும் அதற்கான காரணங்களும் | தோல் நோய் உண்டாகக் காரணம் தெரியுமா?

Important functions of the skin on our body

No comments:

Post a Comment