மச்சங்களைப் பற்றி நமக்கெல்லாம் பொதுவான சில கருத்துக்கள் உண்டு. மச்சங்கள் அதிர்ஷ்ட சின்னங்கள் என்றும் அழகின் சின்னங்கள் என்றும் நம்மில் பெரும் பகுதியினர் எண்ணுகிறார்கள். இதற்கு விஞ்ஞானபூர்வமான அடிப்படைக் கருத்து ஏதுமில்லை என்றாலும் மக்களின் இந்த கருத்துக்கள் எந்தவித தீங்கினையும் ஏற்படுத்துவதில்லை. ஆனால் இதே மச்சங்கள் பரம்பரை வழி ஏற்பட நோய்ச் சின்னமாக இருந்து விடவும் வாய்ப்புண்டு.
மச்சங்கள் பரம்பரை வழி வந்த சரும நோய்களின் அடையாளமாக இருப்பது மட்டுமின்றி வேறு சில கடுமையான நோய்களின் அறிகுறியாகவும் இருக்க கூடும் என தற்கால மருத்துவ மேதைகள் அச்சம் தெரிவிக்கிறார்கள்.
மச்சங்கள் அதனின் இயல்பு நிலை மாறி அதன் அமைப்பிலோ நிறத்திலோ ஏதாவது மாறுதல் தென்பட்டால் அது குறித்து கவனம் செலுத்த வேண்டும். மருத்துவரின் ஆலோசனையை நாட வேண்டும். அவ்வாறு மச்சங்களின் அமைப்பிலோ நிறத்திலோ மாறுபாடுகள் தென்பட்டால் அவை புற்றுநோய் அல்லது தொழு நோய் தொற்று நோயாக இருக்கக்கூடும். ஆனால் அதுகுறித்து அளவுக்கு அதிகமாக அச்சப்படத் தேவையில்லை. இது ஒரு ஐயப்பாடு தான். இது தொடர்பாக ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் தங்களுக்கு தாங்களே மனதைக் குழப்பிக்கொள்ளாமல் மருத்துவர்களை அணுகி அவர்கள் ஆலோசனை பெறுவது நல்லது.
No comments:
Post a Comment