நம்மில் சிலர் கறுப்பாகவும் சிலர் சிவப்பாகவும் இருக்கக் காரணமென்ன? நமது உடல் தோலின் முக்கியத்துவம் அறிவோம் - Kalvimalar-கல்விமலர்

Latest

Tuesday, October 13, 2020

நம்மில் சிலர் கறுப்பாகவும் சிலர் சிவப்பாகவும் இருக்கக் காரணமென்ன? நமது உடல் தோலின் முக்கியத்துவம் அறிவோம்

நம்மில் சிலர் கறுப்பாகவும் சிலர் சிவப்பாகவும் இருக்கக் காரணமென்ன?  நமது உடல் தோலின் முக்கியத்துவம் அறிவோம்.


தொல்லைதரும் தோல் நோய்கள்  

நமது உடல் தோல் 

நமது உடலில் உள்ளும் புறமுமாக ஏராளமான உறுப்புகள் இருக்கின்றன. அவற்றில் முதன்மையானதும் முக்கியமானதுமான உறுப்பு சருமம்  அல்லது தோல் ஆகும்.  

நம் மக்களில் பெரும்பகுதியினர் உடல் சருமத்தை ஒரு உறுப்பாகவே கருதுவதில்லை.  நமது உடலில் உள்ள அத்தனை உறுப்புகளையும் விட சருமம்  தான் முக்கியமான பாகம். 

சருமம் அல்லது தோல் நமது உடலை ஒரு போர்வை போர்த்தி மூடி கொண்டிருக்கிறது.  இது நமது உடலில் உள்ள அத்தனை உறுப்புகளையும் பாதுகாக்கும் காவலனாக திகழ்கிறது. வெளி உலகத்திலிருந்து நோய் உண்டாகக் கூடிய நச்சுக் கிருமிகள் உடலுக்குள் புகுந்து ஒவ்வொரு உறுப்புகளையும் தாக்கி ஒரே நேரத்தில் ஏராளமான நோய்களை தோற்றுவிக்க கூடும். இது தவிர நமது உடல் எடை 16% தோல் அல்லது சருமமாகவே இருக்கிறது.   

பொதுவாக நாம்,  உடல் சருமத்தைப் பற்றி எண்ணும்போது ஒரே பொருளாலான ஒரு உரை போன்ற சருமம் அமைந்திருப்பதாகக் கருதிவிடுகிறார்கள்.   
உடல் சருமமானது மூன்று அடுக்குகளைக் கொண்டதாக விளங்குகிறது.  இவற்றைப் 

  • புறச்சருமம்
  • மேல் சருமம்
  • அடிச்சருமம் என வகைப்படுத்தலாம். 

முதலாவதான புறதத்தோலைத்தான்  நாம் கண்களால் பார்க்கிறோம். இந்த புறச்சருமும் ஒரே தன்மையானதாக இல்லை.  இந்தப்  புறச்சருமம் மூன்று பகுதிகளைக் கொண்டதாக விளங்குகிறது.  சாதாரணமாக இந்த புற சருமத்தின் மேல்  அடுக்கைத்தான் நாம் கண்களால் பார்க்க முடிகிறது.  

இந்த மேலடுக்கு முற்றிலும் இறந்து போன செல்களால் ஆனது.  இந்த பகுதி அதிக கனத்  தன்மையுடன் விளங்கும்.  இந்த கடின தன்மை இந்த செல்களிலும் அதிகமாக இருக்கும்.  கெராட்டின் எனும் புரதமே காரணமாக இருக்கிறது. 

இந்த அடுக்கு எப்போதும் கழிந்து கொண்டே இருக்கிறது.  இவ்வாறு சருமம் கழிவது சாதாரணமாக நமது கண்ணுக்குத் தெரிவதில்லை என்றாலும் சில சமயங்களில் தோல் உரிவதை நாம் காண முடியும்.  இவ்வாறு தோல் உரிவதாக நாம் கூறுவது சருமத்தின் மேல் அடுக்குக் கழிவதைத்தான். மண்வெட்டியால் வெட்டும் போது அல்லது கோடாரியால் விறகு வெட்டும்போது அல்லது இது போன்ற கடினமான வேலைகளை செய்யும்போது உள்ளங்கையின் சில பகுதிகளில் தோல் தடித்து விடுவதைக் காணலாம். பொதுவாக இதை காய்த்து போதல் என்பர். புறத்தோலின் கடினமான மேல் அடுக்கு தடித்து போவது தான் இதற்கு காரணம்.

புற சருமத்தில் இந்த மேல் அடுக்கிற்குக்  கீழே வேறு மூன்று அடுக்குகள் உள்ளன. இந்த மூன்று அடுக்குகளுமே உயிருள்ள செல்களால் ஆனவைதான். அவற்றுள் ஒவ்வொரு அடுக்கில் உள்ள செல்களும் வெவ்வேறு முதிர்ச்சி நிலையில் காணப்படும். இந்த மூன்று அடுக்குகளில் மேலே உள்ளது அடுக்கு என்றும் நடுவில் உள்ளது கிரானிலார்  (Granular) என்றும் நடுவிலுல் உள்ளது பிரிக்கிள் (Priekle) அடுக்கு என்றும் அடியிலுள்ளது அடிப்படை அடுக்கு என்றும் அழைக்கப்படுகின்றன.  

அடிப்படை அடுக்கில் எப்போதும் செல் இழப்பு நிகழ்ந்து கொண்டே இருக்கும். இதன் விளைவாக தொடர்ந்து புதிய செல்கள் உருவாகி கொண்டிருக்கும். இவ்வாறு உருவாகும் புதிய சரும செல்கள் முதலில் அடுத்த அடுக்கான பிரிக்கிள் அடுக்கிற்கும் அதன் பின்னர் கிரானுலார் அடிக்கிற்கும் தள்ளப்படுகின்றன. 

முதிர்ந்த தோல் செல்கள் இவ்வாறு ஒவ்வொரு அடுக்காக தள்ளப்படும் போது அவற்றின் வடிவம் மாறுகின்றது. அதோடு அந்த செல்களில் கெராட்டின் என்னும் புரத உற்பத்தியை அதிகரிக்கிறது.  எனவே இந்த செல்கள் கிரானுலார் அடுக்கை இவற்றில்  புரதம் நிறைந்து விடுகிறது.  இந்த கெராட்டின்தான் அவற்றின் இயல்பான தோற்றத்தை கொடுக்கின்றன.

கிரானுலார் அடுக்கை அடைந்ததும் தோல் செல்கள் இறக்க துவங்குகின்றன. இவ்வாறு இறந்த செல்களும் தொடர்ந்து புதிதாக உருவாகிக் கொண்டிருக்கும் செல்களால் மேல் நோக்கி தள்ளப்பட்டு கொண்டே இருக்கின்றன. எனவே அவை கிரானுலார் அடுக்கைவிட்டு புறத்தோலின் மேல் அடுக்கை நோக்கி வருகின்றன. இதனால் புறத்தோலின் மேல் அடுக்கில் உள்ள இறந்த செல்கள் கழிந்து கொண்டே இருக்கின்றன. 

இவ்வாறு  புறச்சருமத்தின் அடிப்படையில் ஒரு புதிய செல்கள் உருவாகி தொடர்ந்து உருவாகும்.  புதிய செல்களால் அது மேல் நோக்கி தள்ளப்பட்டு முதிர்ச்சி அடைந்த தோலின் மேல் அடுக்கை அடைந்து கழிந்து அல்லது உதிர்ந்து போவதற்கு சுமார் 50 தினங்கள் ஆகின்றன.  அதாவது சுமார் 50 தினங்களில் புறத்தோல் புதுப்பிக்கப்படுகிறது.

ஆனால் நோய் மூப்பு போன்ற காரணங்களால் புறத்தோல் புதுப்பிக்கப்படுவது தாமதிக்கப்படவும் அல்லது தடைபடும் செய்யலாம். இவ்வாறு புதுப்பிக்கப்பட்டது இளமைப் பருவத்தில் மிகவும் இயல்பாக நிகழ்கிறது. அந்தப் பருவத்தில் ஒருவருடைய தோலும் அதனால் அவருடைய தோற்றமும் அழகாக இருப்பதற்கான முக்கிய காரணம். 

புறச்சருமத்தில் அடிப்படை அடுக்கு ஒருவித பிரத்யேக செல்கள் இதர பொருட்களுடன் கலந்து காணப்படுகின்றன.  இந்த செல்களுக்கு மல்பிஜியன் (Mulpighian)  செல்கள் என பெயர்.

இந்த செல்கள் மெலனின்  (Melanin) என்னும் நிறமியை உற்பத்தி செய்கின்றது.  ஒருவருடைய உடல் வண்ணத்திற்கு இந்த மெலனின் தான் காரணமாக இருக்கிறது.  

அதாவது ஒருவருடைய உடல் சருமத்தில் இருந்த மெலனின் குறைவாக இருந்தால் அவர் பழுப்பு அல்லது வெள்ளை நிறமாக காட்சி அளிப்பார்.  இந்த மெலனின் அதிகமாக இருந்தால் அவர் கருப்பு நிறமாக இருப்பார்.  

சூரிய ஒளியின் மோசமான பாதிப்பிலிருந்து நம் உடலை பாதுகாக்க இந்த மெலனின் உதவுகின்றது.  எனவே ஒருவருடைய தோலில் சூரிய ஒளி அதிகமாகப்பட்டால் அதனால் அவருடைய தோலில் உள்ள மல்பிஜியன் செல்கள் தூண்டப்பட்டு அதிக அளவில் மெலனின் நிறமியை உற்பத்தி செய்கின்றன. அதிக வெயிலினால் ஒருவருடைய உடல் கறுத்துப் போவதற்கு இதுவே காரணம்.

புற சருமத்தை அடுத்து மேல் தோல் உள்ளது.  இதைக் கோரியம்  (Corium) என்றும் அழைப்பார்.  இது முக்கியமாக கொலாஜன் எனும் புரதத்தால் ஆனது. இதன் மேல் பரப்பு சமதளமாக இல்லாமல் மேடு பள்ளமாக இருக்கும். நமது புறச் சருமத்தில் காணப்படும் மேடு பள்ளமான தோற்றத்திற்கு இதுவே காரணம். 

மேல் சருமத்தில் மீள் தன்மையுடைய வலுவான திசுக்கள் நிறைந்து உள்ளது. இந்த பகுதியில் ஆயிரக்கணக்கான நுண்ணிய தந்துகிக் குழாய்களும்,  நிணநீர் குழாய்களும் பின்னிக் கிடக்கின்றன.  நரம்பு முடிவுகளும் அதிக அளவில் உள்ளன.  இவை தவிர முடிக்குருத்து உறைகளும்,  எண்ணெய்ச் சுரப்பிகள், வியர்வைச் சுரப்பிகள், வாசனைச் சுரப்பிகள் முதலியனவும் மேல் தோலில்தான் உள்ளன.  

மேல் சருமத்தை அடுத்து  அடித்தோல் உள்ளது. அடித்தோல் முக்கியமாகக் கொழுப்பு திசுக்களால் ஆனது.  இது உடலின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு தடிமனுடன் காணப்படுகிறது.  எனவே,  உடலின் இயல்பான தோற்றத்திற்கு இந்த கொழுப்பு திசு ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது என்று கூறலாம்.  தோலுக்கும் தசைக்கும் இடையில் உராய்வு ஏற்படுவதை தடுக்கும்  மெத்தையாகவும், உடலின் வெப்பத்தைப் பாதுகாக்கும்  வெப்பக் காப்பாகவும் அடித்தோல் செயல்படுகிறது.


1 comment: