எச்சில் மூலம் பரவும் நோய்கள் யாவை? What are the diseases transmitted through saliva?
எச்சில் நோய்கள்
சிலருடைய உடல் சருமம் மீன் செதில் போன்று அமைந்து இருப்பது உண்டு. இந்த மாதிரியான குறிகள் கால்களின் முன் பகுதியில் தான் அதிகமாக காணப்படும். மற்றபடி முகத்தில் உடம்பின் வேறு பகுதிகளிலும் அறிகுறிகள் ஏற்படுவது இல்லை. இந்த நோய் பரம்பரை வழியாக தோன்றக்கூடியது. அதனால் இதனை முற்றிலும் குணமாக்கி விட முடியும் என்று எதிர்பார்க்கக் கூடாது என்றாலும் சருமத்தில் காணப்படும் இது இந்த செதில் போன்ற அமைப்பை மாற்றுவதற்கு ஓரளவுக்கு முயற்சி மேற்கொள்ளலாம்.
சருமத்தை மென்மையாக்கும் குறிப்புகள் தற்காலத்தில் கிடைக்கின்றன. அவற்றையோ சருமத்தை மென்மைபடுத்தும் மருந்துகளை பயன்படுத்தலாம். சாதாரண தேங்காய் எண்ணெயை தொடர்ந்து பயன்படுத்தினால் கூட ஓரளவுக்கு உபயம் (பயன்) ஏற்படக்கூடும்.
கரும்புள்ளி நோய்
சிலருடைய உடலில் சிறு சிறு புள்ளிகள் காணப்படும். இந்த புள்ளிகளினால் வலியோ வேதனையோ அதிகமாக இருப்பதில்லை. உடலின் மெலனின் என்ற நிறமியை உற்பத்தி செய்யும் சில செல்கள் இயல்பை மீறி பெருத்து விடும். இந்த நிறமியை சற்று அளவுக்கு அதிகமாக உற்பத்தி செய்கிறது. உடலில் எந்தப் பகுதியில் இத்தகைய தேவையற்ற மெலனின் அதிகமாக இருக்கிறதோ அந்தப் பகுதியில் மட்டும் சருமத்தின் மீது சிறு புள்ளிகள் காணப்படும். இம்மாதிரி புள்ளிகள் உடலில் சூரிய ஒளி அதிகமாகப் படும் இடங்களில் தான் காணப்படும். அடிக்கடி வெயிலில் அலைந்து கொண்டிருப்பவர்கள் இந்த புள்ளிகள் அதிகமாகி கருப்பாகி விடும். இம்மாதிரி புள்ளிகளை முற்றிலுமாக அகற்றி விட முடியாது. கரும்புள்ளிகள் ஏற்பட்டு இருக்கும் உடல் பகுதியை கூடியவரை வெயிலில் காண்பிக்காமல் இருக்க முயற்சிக்க வேண்டும். சருமத்தில் ஏற்படும் காய்ப்புகளை அகற்றுவதற்கான சில மருந்துக் களிம்புகள் சில மருந்து கடைகளில் கிடைக்கும். அவற்றை அடிக்கடி சருமத்தின் மீது தடவி வருவதன் மூலம் இந்த சரும புள்ளிகளை ஓரளவு கட்டுப்படுத்தலாம்.
இதுவரை சொன்ன சரும புள்ளிகள் அவ்வளவு ஆபத்தானவை அல்ல. இதே கரும்புள்ளிகளில் வேறு ஒரு வகை உண்டு. இதன் விளைவு சற்று கடுமையாக இருக்கும்.
இந்த வகை கரும்புள்ளிகளும் பரம்பரை வழி வரக்கூடிய நோயே. இது குழந்தைப் பருவத்திலேயே துவங்கி விடுவது உண்டு. இம்மாதிரி பாதிப்புக்கு இலக்கான குழந்தை தொடக்கத்திலேயே வெளிச்சத்தைக் கண்டால் அலர்ஜி அடையும். ஆரம்ப அறிகுறியாக கன்னங்களில் பொடியான சிவந்த புண்கள் ஏற்படும். வயது ஆக ஆக அந்த சிவந்த புண்கள் கரும்புள்ளிகள் ஆக மாறும். முதலில் சூரிய வெளிச்சம் படும் இடங்களில் தோன்றும். இந்த கரும்புள்ளிகள் நாளடைவில் சூரிய வெளிச்சம் படாத இடங்களிலும் இந்த புள்ளிகள் தோன்றக்கூடும். சில ஆண்டுகள் சென்ற பிறகு இந்த கரும்புள்ளிகள் சருமப் புற்றுநோயாக மாறிவிடும் அபாயமும் உண்டு.
இந்த நோயை உடனடியாக சிகிச்சை மேற் கொள்ளாமல் விட்டு விட்டால் உயிருக்கே கூட ஆபத்து ஏற்படும். இந்த நோயை முற்றிலுமாக குணப்படுத்தா விட்டாலும் தீவிரமான சிகிச்சையின் மூலம் நோயை ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும்.
சூரிய வெப்ப பாதிப்பு
பொதுவாக சூரிய ஒளி வெப்பம் மென்மையாக உடலில் படும் போது உடல் ஆரோக்கியத்திற்கு பல வகையிலும் உதவியாக இருக்கிறது. ஆனால் சூரிய வெப்பம் அளவுக்கு அதிகமாக உடலில் தாக்கும் போது நமது உடல் சருமம் படுமோசமாக பாதிக்கப்படுகிறது. இது குறித்து முன்னரே விளக்கி இருக்கிறோம். இது தொடர்பான வேறு சில தகவல்களை இப்போது கூறுகிறோம். சூரிய வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து சருமத்தை பாதுகாப்பதற்கு ஆரம்பத்திலேயே சில இயற்கை அமைப்புகள் உள்ளன.
புறத் தோலில் காணப்படும் மெலனின் என்னும் பொருளும் சூரிய வெப்ப பாதிப்பில் இருந்து ஓரளவுக்கு பாதுகாக்கிறது. ஆனால் இந்த பாதுகாப்பு ஏற்பாடு ஓரளவுக்குத்தான் பயன்படும். ஒருவருடைய உடலில் சூரிய வெப்பம் அதிக நேரம் பாதிக்கப்படக்கூடிய நிலை இருந்தால் மேற்சொன்ன பாதுகாப்பு ஏற்பாடு அதிக அளவுக்கு பயன் தருவதில்லை.
இம்மாதிரி சூரிய ஒளி படுவதனால் மேனியில் கட்டிகள் தோன்றும். உடல் சருமத்தில் சூடு போட்டது போன்ற கொப்புளங்கள் ஏற்படும். சில சந்தர்ப்பங்களில் சிறு சிறு கொப்பளங்கள் ஏற்பட்ட தோன்றும். இம்மாதிரி சருமப் பிணிகளுக்கு தீவிரமான சிகிச்சை ஏதும் தேவையில்லை. எளிய தடுப்பு முறைகளை கையாண்டால் போதும்.
சாதாரணமாக உடல் சருமத்தில் வேனல் கட்டிகள் புண்கள் ஏற்பட்டு இருந்தால் ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு முறை சுத்தமான வெள்ளைத் துணியை சுடுநீரில் நனைத்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒத்தடம் கொடுக்கலாம். இவ்வகையான சரும நோய்களுக்கு தொடர்வதற்கான பலவிதமான மருந்துகள் மருந்து கடைகளில் கிடைக்கின்றன. அவற்றை வாங்கி தடவுவதன் மூலம் குணம் பெறலாம். இவ்வகையான சூரிய வெப்ப தாக்குதல்கள் காரணமாக சருமத்தில் ஏற்பட்டு அதற்கு சிகிச்சை மேற்கொள்வதை விட முடிந்த அளவிற்கு சூரிய வெப்பத்திலிருந்து நமது உடல் சருமத்தை பாதுகாத்து கொள்ள முயற்சிப்பது தான் நல்லது.
கோடைக்காலத்தில் முடிந்த அளவிற்கு நமது உடல் சூரிய வெப்பம் படாதவாறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வெயிலில் அதிக நேரம் நடமாட வேண்டி நேர்ந்தால் குடை போன்றவற்றை அவசியம் பயன்படுத்த வேண்டும். குடைகளை பயன்படுத்த அதிக வசதி இல்லை என்றால் மென்மையான துணியை தலையில் முக்காடு போட்டுக்கொண்டு நடமாடலாம். சாதாரணமாக வெயில் காலத்தில் வெள்ளைக் கைத்தறி அல்லது கதர் துணிகளை மேல் உடையாக அணிந்து சென்றால் சூரிய வெப்பத்தில் இருந்து நல்ல பாதுகாப்பு கிடைக்கும்.
No comments:
Post a Comment