உணவுப் பற்றாக்குறையால் ஏற்படும் சரும நோய்கள் | Skin diseases caused by lack of food
உணவு பற்றாக்குறையால் ஏற்படும் சரும நோய்கள்
நமது உடல், நல்ல வளர்ச்சி அடைவதற்கும் நோயற்று ஆரோக்கியமாக வாழ்வதற்கும் நாம் உண்ணும் உணவில் இருந்து கிடைக்கும் சத்துக்கள் தான் உதவுகின்றன. நல்ல சத்துணவை நாம் திட்டமிட்டு அன்றாடம் உட்கொண்டால் நமக்கு நோய் ஏற்படாது. நீண்ட ஆயுளுடன் வாழமுடியும் நமது உடல் சருமத்தில் ஏற்படும் பல நோய்களுக்கு உணவு சத்து பற்றாக்குறை காரணமாக அமைவது உண்டு.
நமது உடலுக்கு தேவையான சத்து உணவின் மூலம் கிடைக்காத போது நமது உடல் நோய் எதிர்ப்பு ஆற்றலை பெற முடியாமல் போய்விடுகிறது. இதன் காரணமாக நோய்க்கிருமிகள் மிக எளிதாக நமது உடலுக்குள் ஊடுருவி சென்று நோய்களை தோற்றுவித்து விடுகின்றன.
ஒரு மனிதருக்கு ஏதாவது ஒரு குறிப்பிட்ட உணவு சத்து குறைபாடு காரணமாக நோய் ஏற்பட்டிருந்தால் அந்த நோயை சரி செய்வதற்கு அந்த குறிப்பிட்ட உணவு சத்தை கொடுப்பது மட்டும் போதாது. மற்ற எல்லா உணவுகளிலும் சேர்த்து ஒரு தரமான உணவை உட்கொள்ளும் போது தான் சத்து குறைவினால் ஏற்பட்ட நோய் குணமாகும். இந்த திட்டம் உணவு பற்றாக்குறை காரணமாக ஏற்படும் சரும நோய்க்கும் பொருந்தும்.
இனி உணவு பற்றாக்குறை காரணமாக ஏற்படக்கூடிய சில சரும நோய்களை பற்றி இப்போது தெரிந்துகொள்வோம்....
தவளை சொறி (Frog rash)
இந்த தவளை சொறி பெரும்பாலும் குழந்தைகளுக்குத்தான் அதிகம் ஏற்படுவதும் உண்டு. இந்த நோய் தோன்றுவதற்கான அடிப்படைக் காரணம் நமது உடலுக்குத் தேவையான கொழுப்பு அமிலங்கள் நாம் உண்ணும் உணவின் மூலம் கிடைக்கப் பெறாமையே ஆகும்.
இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களை சில அடையாளங்கள் மூலம் கண்டுகொள்ளலாம். குறிப்பாக முழங்கால்கள் முழங்கைகள் உட்காரும் இடம் போன்ற பகுதிகளில் வேர்க்குரு போன்ற கடினமான சிறுசிறு கொப்புளங்கள் காணப்பட்டால் இது தவளை சொறிகடகு அடையாளம் என கொள்ளலாம்.
இந்த கொப்பளங்களில் நீர் கசிவு போன்றவை இருப்பதில்லை. அதிகப்படியான வலி இருக்காது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் தோல் உலர்ந்து காணப்படும். உணவில் வைட்டமின் ஏ பற்றாக்குறை இருந்தாலும் இது போன்ற சரும பாதிப்புகள் இருக்கும். வைட்டமின் ஏ பற்றாக்குறை காரணமாக சரும பாதிப்பு ஏற்பட்டிருந்தால் மீன் செதில்கள் போன்ற செதில்களும் சருமத்தில் காணப்படும். சருமம் அதிகப்படியான வறட்சியுடன் காண காணப்படும்.
தவளை சொறி நோய்க்கு இலக்கானவர்கள் இதற்காக மேல் பூச்சு மருந்துகளை உபயோகித்து சிகிச்சை பெறுவதனால் ஒரு பயனும் விளையாது.
வைட்டமின்-ஏ சத்து மிகுந்த காய்கறிகளை உணவில் அதிகமாக சேர்த்துக்கொள்ள வேண்டும். அன்றாட உணவில் கேரட்டை முடிந்த அளவுக்கு அதிகமாக ஏதாவது ஒரு வகையில் சேர்த்துக் கொள்ளவேண்டும். துரிதமாக குணம் பெறுவதற்கு வைட்டமின் ஏ டானிக்குகளை அல்லது மாத்திரைகளை தொடர்ந்து பயன்படுத்தலாம். பொதுவாக கொழுப்பு அமிலங்கள் தாவர எண்ணெய்களில் தான் அதிகமாக இருக்கின்றன. இம்மாதிரியான சரும நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் உணவில் தாவர எண்ணெய்களை அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பெல்லாக்ரா (Pellagra)
இந்த நோய் ஏற்படுவதற்கு உணவில் ஏ வைட்டமின்களில் ஒன்றான நிக்கோடினிக் அமிலம் உடலில் பற்றாக்குறையாக இருப்பது தான் காரணம். காசநோய்க்கு அடிக்கடி கடுமையான மருந்துகளை உட்கொள்ளும் காரணமாகவும் இந்த நோய் ஏற்பட காரணம் உண்டு.
இதற்கு முன்னர் சூரிய வெப்பம் காரணமாக ஏற்படும் சில நோய்களைப் பற்றி சொல்லி இருக்கிறோம். அவையெல்லாம் பரம்பரை வழி நோய்கள் என்றும் குறிப்பிட்டு இருக்கிறோம். இவ்வாறு பரம்பரை நோயாக அல்லாமல் நிக்கோடினிக் அமிலம் பற்றாக்குறையினால் இம்மாதிரியான நோய் ஏற்பட வாய்ப்பு உண்டு. உடலில் நிக்கோடினிக் அமிலம் பற்றாக்குறையினால் மிகக் குறைவான சூரிய வெப்பம் கூட சருமத்தில் பல விதமான சரும நோய்களை தோற்றுவித்து விடக்கூடும். இதன் விளைவாக சூரிய வெப்பம் படக்கூடிய முகம் கைகளில் வெளிப்பகுதி அதிகமாக பாதிக்கப்படும்.
இந்த நோய்க்கு இலக்காணவர்களுக்கு வேறு சில உடல் கோளாறுகளும் ஏற்படுவது உண்டு. இவர்களுக்கு ரத்த சோகை இருக்கும். அடிக்கடி வயிற்றுப் போக்கு இருக்கும். நாக்கு சிவந்து தடித்து காணப்படும். இந்த வகை சரும பாதிப்புகளுக்கு இலக்கானவர்கள் சூரிய வெப்பத்தில் உடலை அதிகமாக காண்பிக்காமல் இருக்குமாறு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இந்த நோய்க்கு இலக்கானவர்கள் நிக்கோடினிக் அமிலம் மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனை படி ஒரு நாளைக்கு இரண்டு வேளை உட்கொள்ளலாம்.
No comments:
Post a Comment